தற்போதைய செய்திகள்

தலைமை செயலகத்தில் யாருக்கு அருகில் அமைச்சராகும் உதயநிதியின் பிரத்யேக அறை

அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கான அறையை, தலைமைச் செயலகத்தில் தயார் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், வரும் 14-ஆம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கான அறையை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உதயநிதிக்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி ஆகியோர் அறைகளுக்கு அருகில் உதயநிதியின் அறை தயாராகி வருகிறது. முன்னதாக அந்த இடத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறையைச் சேர்ந்த அலுவல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்த துறையை சேர்ந்த அலுவலர்களுக்கு, இரண்டாம் தளத்தில் இருந்த டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரதிநிதிக்கு, 10-வது நுழைவு வாயில் அருகே அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உதயநிதியின் அறையை தயார் செய்யும் பணிக்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 2-நாள்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்