தற்போதைய செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு

தந்தி டிவி

தமிழக அரசு வேலை வாய்ப்புக்கு அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, நடைபெறும் போட்டித்தேர்வுகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 12 தேர்வுகள், அடுத்த ஆண்டு நடைபெறும், ஜனவரி 28-ஆம் தேதி குரூப் 3 தேர்வும், பிப்ரவரி 13-ஆம் தேதி மருத்துவ அலுவலர் தேர்வும் நடைபெறுகிறது.

பிப்ரவரி 25-ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகளும், மார்ச் 15-ல் உதவி கால்நடை மருத்துவர் தேர்வும், ஏப்ரல் 9-ல் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வும் நடைபெறுகிறது.

அதேபோல 2023ம் ஆண்டில் வெளியாகும் தேர்வுகள் மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்த 11 அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

அதிகம் பேர் எதிர்பார்க்கும் குரூப் 4 பணி அறிவிப்பு 2023ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு, 2024-பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, அடுத்தாண்டு மே மாதம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வும் ஊரக சாலை ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

Petrol | பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு.. எதிர்ப்பில் குதித்த டீலர் சங்கம்

Thiruvallur POCSO | 3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம் - வடமாநில இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ

Crime | முட்புதரில் மோசமாக கிடந்த 3 வயது குழந்தை.. வடமாநில கொடூரன் கைது..

BREAKING || IranIsraelWar | Trump |திடீர் திருப்பம்..முடிவுக்கு வருகிறதா போர்? -அறிவித்தார் டிரம்ப்