தற்போதைய செய்திகள்

டேங்க் ஆபரேட்டர் பணிக்கு ரூ.5 லட்சம் கேட்ட ஊ.ம.தலைவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அருகே, மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர் பணிக்கு 5 லட்சம் கேட்டு, முதற்கட்டமாக 25 ஆயிரம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். • எடப்பிறையில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜீவாமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். • அந்த கிராமத்தில் மேல்நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி, கடந்த 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். • அந்த பணியை அவரது மனைவி பராசக்திக்கு வழங்குவதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாமூர்த்தி 5 லட்சம் பேரம் பேசி பணம் தரும்படி நெருக்கடி அளித்துள்ளார். • இது குறித்து பராசக்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். • அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை, போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக்கூடத்தில் அமர்ந்திருந்த ஜீவாமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். • அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். • அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்