தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - அரசு பள்ளி ஆசிரியர் கைது!

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். • கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆங்கில பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். • இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. • இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். • அதன் பேரில் போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிக்குச் சென்று விசாரணை செய்தனர். • அப்போது ஆங்கில ஆசிரியர் முருகன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. • இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆங்கில ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்