தற்போதைய செய்திகள்

நிதி நிறுவன பங்குதார‌ர்களிடையே தகராறு - இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சாலையில் திரண்ட உறவினர்கள் - தி.மலையில் பரபரப்பு

தந்தி டிவி
• செய்யாறை சேர்ந்த திருநாவுக்கரசு, அன்பு ஆகிய இருவரும் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். • இதில், அன்பு தனியாக தொழில் தொடங்க இருப்பதாக கூறி, திருநாவுக்கரசுவிடம் தனது பங்கு தொகையை திருப்பி கேட்டதாக தெரிகிறது. • ஆனால், பணம் முழுவதும் வசூல் ஆன பின்னரே பங்கு தொகையை தர முடியும் திருநாவுக்கரசு கூறியுள்ளார். • இதனால், அன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருநாவுக்கரசை மிரட்டியதாக கூறப்படுகிறது. • இதனால் அச்சமடைந்த திருநாவுக்கரசு, அவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். • இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டிய அன்பு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருநாவுக்கரசுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதனால் செய்யாறு, ஆற்காடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. • தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த‌ன் பேரில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி