தற்போதைய செய்திகள்

"விளையாட சென்ற சிறுவன் குளத்தில் செத்து மிதந்த சோகம்“ - போலீசார் தீவிர விசாரணை | திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மீஞ்சூர் அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்த குமார், வருவாய்த்துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். • இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். • 10 வயது மகன் மோனீஷ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். • சைக்கிளுக்கு பஞ்சர் போட வேண்டுமென கூறிவிட்டு சென்ற மோனீஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. • இதையடுத்து, தனது மகனை காணவில்லை என அவரது தந்தை, காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • இந்நிலையில், வாயலூரில் உள்ள குளத்தில் சிறுவன் மோனீஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • விளையாட சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்தானா? குளிக்க சென்றபோது குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது