தற்போதைய செய்திகள்

மயானத்தில் புதைத்த உடலை தோண்டி எடுத்த போலீசார்... காரணம் என்ன? - திருப்பூரில் அதிர்ச்சி

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வீட்டில் தூக்கு போட்டு இறந்த நபரை காவல் துறையினருக்கு தெரியாமல் குடும்பத்தினர் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் முருகன். • முருகனுக்கு பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்நிலையில் சனிக்கிழமை குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முருகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு கூறாமல், குடும்பத்தினர் முருகனின் உடலை மாணிக்காபுரம் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். • தகவலறிந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • இதனையடுத்து போலீசார் மாணிக்காபுரம் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்த முருகனின் உடலை வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், பல்லடம் டி.எஸ்.பி சௌமியா தலைமையில் தோண்டி எடுத்தனர். • பின்னர், அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்