தற்போதைய செய்திகள்

"ஏழுமலையான் கோயில் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்" - ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி அறிவிப்பு

தந்தி டிவி
• ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. • திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். • ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். • ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்