தற்போதைய செய்திகள்

"திருப்பதியில் திருடு போன பக்தர்களின் 1 கோடி செல்போன்கள்" - போலீசார் செய்த சூப்பர் செயல்

தந்தி டிவி
• திருப்பதியில், திருடு போன பக்தர்களின் செல்போன்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டு, கொரியர் சர்வீஸ் பங்களிப்புடன் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. • திருப்பதியில் செல்போன்களை பறிகொடுக்கும் பக்தர்கள், காவல் நிலையத்துக்கு வராமலேயே, தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. • இதற்காக, மொபைல் ஹன்ட் என்ற பெயரில் பிரத்யேக வாட்ஸ்அப் நம்பர் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. • அதன்படி, காணாமல் போன செல்போன்களில், 79 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 780 செல்போன்கள் மீட்கப்பட்டு, மூன்று கட்டங்களாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. • இந்நிலையில், 4ஆம் கட்டமாக 45 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்களை மீட்டு, திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைத்தார். • மேலும், செல்போன்களை தவறவிட்ட பக்தர்களுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்