தற்போதைய செய்திகள்

"திருப்பதி ஏழுமலையான தரிசிக்க முடியாத ஏழை மக்களுக்காக.." - தேவஸ்தானம் அறிவிப்பு

தந்தி டிவி
• திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தியாகராய நகர் ஜி என் செட்டி சாலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடத்தப்பட உள்ளது. • இதனை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி உடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். • அப்போது பேசிய சுப்பா ரெட்டி, திருப்பதிக்கு அடுத்து இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். • மிக விரைவில் சென்னையில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கான நிரந்தர கோயிலை கட்ட உள்ளதாக கூறினார். • அதற்கான நிலங்கள் வாங்கப்பட்ட வருவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடியும் என்றார். • மேலும், பட்டியல் இனத்தவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில், ஏழுமலையான தரிசிக்க முடியாத ஏழை மக்களுக்காக கோவில் கட்டி தர, திருப்பதி தேவஸ்தானம் தயாராக உள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். • இதற்கான கோரிக்கையை விரைவில் முதலமைச்சருக்கு வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்