தற்போதைய செய்திகள்

காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற ஓனர்...திரும்பி வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி | Thuthukudi

தந்தி டிவி

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை சாலையோரத்தில் சாவியுடன் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் மாயமானதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடத்தப்பட்ட கார் முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அதன்படி அந்தக் காரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் சுயம்புலிங்கம் மற்றும் முருகன் ஆகிய 2 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மதுபோதையில் காரில் இருந்து தங்கத்துரை என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்