தற்போதைய செய்திகள்

5 வகுப்பு மாணவியின் மீது பெயர்ந்து விழுந்த பள்ளி மேற்கூரை! - திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பள்ளி மாணவியின் மீது, பள்ளி கட்டடத்தின் சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது • மணியம ்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் பிரதிஷ்கா, 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். • இந்நிலையில், பள்ளி வேலை முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்ற பின், உள்ளூரில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பள்ளியிலேயே பாடம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. • அப்போது, பள்ளி கட்டடத்தின் சிமெண்ட் மேற்கூரை பூச்சு பிரதிஷ்கா மீது பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. • இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர். • காயமடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"