தற்போதைய செய்திகள்

"அவரால தான் என் புள்ள போய்ட்டான்" - 'துணிவு' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் மரணம்... இளைஞரின் தாயார் பரபரப்பு புகார்...

தந்தி டிவி

சென்னையில் துணிவு படம் பார்க்க சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இளைஞரின் தாய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

சென்னையில் நடிகர் அஜித்தின் துணிவு பட கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது ஏறி நடனமாடிய இளைஞர் பரத்குமார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். அதில், விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், விபத்தில் தொடர்புடைய லாரி குறித்தும், அதன் ஓட்டுநர் குறித்தும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்