தற்போதைய செய்திகள்

"பிற மொழி பேசுபவர்கள், தமிழை கற்க வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தந்தி டிவி

காந்தியின் கொள்கை மூலம் தான், இந்திய நாடு வளர வேண்டும் என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காந்தியின், 154 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பேச்சுப்போட்டி, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய நாட்டை நன்றாக புரிந்து வைத்தவர் காந்தி என்று கூறினார். பன்முகம் கொண்ட இந்தியாவில் அனைவரும் காந்தியோடு ஒன்றுபடுவர் என்றும், கிராம வளர்ச்சி பற்றியே சிந்தித்தவர் என்று புகழாரம் சூட்டினார். காந்தியின் வழியில், கற்றலில், கொள்கையின் மூலம் தான், நாடு வளர வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு