தற்போதைய செய்திகள்

தனியாக இருந்த பாட்டிக்கு நேர்ந்த கொடுமை சிக்கிய இளைஞர்கள் - கட்டுப் போட்டு கவனித்த போலீஸ்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகே தனியாக இருந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். • தூத்துக்குடி மாவட்டம், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி காந்திமதி தனியாக வசித்து வருகிறார். • நேற்று அதிகாலை, காந்திமதியின் வீட்டிற்குச் சென்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர நயினார், நெல்லையப்பன் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். • மூதாட்டி பணம் கொடுக்காததால், அவரை கத்தியால் தாக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். • சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். • காந்திமதியின் மகன் அளித்த புகாரின்பேரில், தட்டப்பாறை போலீசார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். • காவல் நிலைய கழிப்பறையில் இருவரும் வழுக்கி விழுந்ததில், காயம் ஏற்பட்டதில், மாவு கட்டு போடப்பட்டுள்ளது. • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்