தற்போதைய செய்திகள்

"இதுதான் எங்கள் இந்தியா".. இந்து ஊழியரின் நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் CUTE வீடியோ

தந்தி டிவி

கேரளாவில் கை உடைந்த மாணவனுக்கு, குடும்பஸ்ரீ கேண்டீன் ஊழியர் உணவு ஊட்டி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ராமாபுரம் பகுதியில், மலபார் மகானி குடும்பஸ்ரீ கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இக்கேண்டீனின் ஊழியர் சுமதி, பாசில் என்ற கை உடைந்த கல்லூரி மாணவனுக்கு, உணவை ஊட்டி விட்டுள்ளார். இந்து மதத்தை சார்ந்த ஊழியர், இஸ்லாமிய மாணவனுக்கு உணவு ஊட்டி விட்ட இச்சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சுமதியை பாராட்டியுள்ள அம்மாநில அமைச்சர் ராஜேஷ், குறிப்பிட்ட வீடியோவை இதுதான் உண்மையாக கேரளா ஸ்டோரி என தலைப்பிட்டு, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்