தற்போதைய செய்திகள்

இறந்தவர் வங்கி கணக்கு விவரங்களை தர மறுப்பு - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தி டிவி
• திருவாரூர் அருகே உயிரிழந்த கணவரின் வங்கி கணக்கு விவரங்களை, மனைவிக்கு தர மறுத்த தனியார் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. • திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் மோகன். • இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். • இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர் உயிரிழந்ததையடுத்து, அவர் வாங்கிய கடன் மீது வங்கி சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. • இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை தனது கணவரின் வங்கி கணக்கு விவரங்களை தனக்கு தர வேண்டுமென அவரது மனைவி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தார். • ஆனால், பல காரணங்களைக் கூறி கணக்கு விவரங்களை தெரிவிக்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது. • இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், வங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்