தற்போதைய செய்திகள்

யார் முந்தி செல்வது? - நடு ரோட்டில் சண்டை போட்டுக்கொண்ட ஓட்டுநர்கள் - கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்

தந்தி டிவி

ஓட்டுநர்கள் சண்டையால் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. போளூர் பேருந்து நிலைய வாயிலில் அரசுப் பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்களுக்கும் இடையே முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதுடன், அரசு பேருந்து ஓட்டுநர் தனது காலணியால் வேன் ஓட்டுநரைத் தாக்க முற்பட்டார். ஆத்திரம் அடைந்த வேன் ஓட்டுநர் வாகனத்தை எடுக்க மறுத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த களேபரத்தில் அப்பகுதியில் வாகனங்கள் அதிகம் கூடியதால் ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி அரை மணி நேரமாக சைரன் ஒலியுடன் தவித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை