தற்போதைய செய்திகள்

ஒன்றாக தூக்கில் தொங்கிய மகன், மருமகள்... அதிர்ச்சியில் உறைந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் விரக்தியடைந்த கணவன், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்குன்றம் அருகே நடந்திருக்கிறது. • சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பகத்சிங் தனது மகன் முருகேசன், மருமகள் ஜெயந்தி மற்றும் பேரக்குழந்தைகளோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். • தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகேசன் ஆன்லைன் வர்த்தகமும் செய்து வந்ததாக தெரிகிறது. • இவர்களுக்கு சொந்தமாக செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் வீடு ஒன்றும் உள்ள நிலையில் அவ்வப்போது அங்கு வந்து தங்குவதும் வழக்கம். • அதன்படி சம்பவத்தன்று தன் மனைவி ஜெயந்தியுடன் வந்த முருகேசனை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். • ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் முருகேசன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். • இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்திருக்கும் சூழலில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்