தற்போதைய செய்திகள்

தங்க நகைகள் கொள்ளையடிக்க சென்ற கும்பல்... தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் ஆத்திரம்... கோபத்தில் மூதாட்டியை அடித்துக் கொன்ற கொடூரம்

தந்தி டிவி
• கொள்ளையடிக்க சென்ற இடத்தில் தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் கோபமடைந்த கொள்ளையர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் திருத்தணி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. • திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். 82 வயதான இவர், தனியாக வசித்து வந்தார். • இவரின் மகன் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். • தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வந்த வள்ளியம்மாள், இன்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டின் உள்ளே சடலமாக கிடந்தார். • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வள்ளியம்மாள் கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. • மூதாட்டி தனியாக வசிப்பதை நோட்டமிட்ட கும்பல் கொள்ளையடிக்க வந்திருக்கிறது. • ஆனால் கடந்த மாதம் தன் வசமிருந்த நகைகள் அனைத்தையும் வள்ளியம்மாள் தன் மகனிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். • திருட வந்த இடத்தில் ஏமாந்து போன அந்த கும்பல் மூதாட்டியை கொடூரமாக கொன்றது உறுதியான நிலையில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்