தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு அண்ணன் பலி, தங்கைக்கு தீவிர சிகிச்சை; பீதியில் திருவள்ளூர் மக்கள்

தந்தி டிவி
• திருத்தணி அருகே காய்ச்சலுக்கு உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். • திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். • இவரது 7 வயது மகன் தேவகுமார், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த10 ம் தேதி உயிரிழந்தார். • இந்தநிலையில் தேவகுமாரின் தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து அவருக்கு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • இதன் எதிரொலியாக காசிநாதபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. • வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்