தற்போதைய செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் பலியான சம்பவம் - உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

தந்தி டிவி

கடந்த மாதம் 21ம் தேதி, போதைக்கு அடிமையான 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பள்ளி மாணவர் மனோஜ்குமார், கழிப்பறையில் மயங்கி விழுந்தார்.

அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கொண்டு செல்லும் போதே இறந்து விட்டார்.

தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாணவனின் தாய் போலீசில் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் சிறுவனை கழிவறையில் வைத்து தாக்கியதில், சிறுவன் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்ததையடுத்து.

போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்