தற்போதைய செய்திகள்

சென்னையில் நைஜீரியர்களின் பகீர் காரியம் - பெங்களூருவில் தட்டி தூக்கிய தமிழக போலீஸ்

தந்தி டிவி

சென்னையில் தனியார் நிறுவன வங்கிக்கணக்கில் இருந்து 17 லட்சம் ரூபாய் திருடிய 3 நைஜீரியர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பொதுமேலாளர், தங்களது வங்கிக்கணக்கில் இருந்து 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மடக்கி, பணம் திருடப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகள் பெங்களூரில் இருப்பதை அறிந்த போலீசார், உடனடியாக பெங்களூரு விரைந்து, மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 லேப்-டாப், 9 செல்போன், 14 சிம் கார்டு மற்றும் 12 டெபிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை