தற்போதைய செய்திகள்

திருடி செல்லும்போது பின்னால் திரும்பி சிரித்ததால் சிக்கிய திருடர்கள் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, எல்இடி டிவியை திருடிச் சென்று, ஏரியில் குதித்து தப்ப முயன்ற கொள்ளையர்களை, போலீசார் சாதூர்யமாக செயல்பட்டு கைது செய்தனர்.

பெரியபாளையம் அடுத்த கற்குழி பகுதியில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதாம் என்பவர் மின்சாதன பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளருக்கு வழங்குவதற்காக, எல்இடி டிவி ஒன்றை தனது நண்பர் உதவியுடன் எடுத்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை வழிமறித்து, எல்இடி டிவியை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்த போலீசார், கொள்ளையர்கள், அருகில் உள்ள ஏரியில் இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஏரியில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்ததுடன், எல்இடி டிவியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான இருவரும் மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜதுரை மற்றும் தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்