தற்போதைய செய்திகள்

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற திருடன்... கட்டிப்பிடி வைத்தியத்தால் திருட விடாமல் தடுத்த "அன்பு" எனும் மந்திரம்

தந்தி டிவி

வங்கிக்குள் நுழைந்த திருடன் ஒருவன் வெடிபொருட்கள் வைத்திடுப்பதாக மிரட்டி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வாடிக்கையாளர்,அந்த திருடனிடம் உரையாடத் துவங்கிய Michael Armus என்ற நபர், "என்ன ஆனது உனக்கு?"... "வேலை இல்லையா?" என கரிசனத்துடன் விசாரிக்க, அந்தத் திருடனோ, "இந்த ஊரில் எனக்கு எதுவுமே இல்லை... நான் சிறை செல்ல விரும்புகிறேன்" என ஆவேசமாகக் கூறியுள்ளான். அந்தத் திருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு தான் வசித்த பகுதியில் வசித்து வந்ததும், தன் மகளின் நண்பர் என்பதையும் அறிந்து கொண்டு Michael Armus, திருடனை வங்கியை விட்டு வெளியில் அழைத்து வந்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ் பாணியிக் கட்டிப்பிடி வைத்தியம் நடத்தி ஆறுதல் கூறியுள்ளார். உடனே, அந்தத் திருடன் அழத் துவங்கியுள்ளார். இதையடுத்து, திருடனைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் சென்று அந்தத் திருடனைப் பார்க்க நினைப்பதாக Michael Armus தெரிவித்துள்ளார். காவல்துறையினரும், பொதுமக்களும் Michael Armus-ன் மனித நேயத்தை வெகுவாகப் பாராட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்