தற்போதைய செய்திகள்

"என்ன கொல்ல வராங்க.. வீட்ல இருக்கவே எனக்கு பயமா இருக்கு.." - பயத்தில் அலறும் பெண்.. திருப்பத்தூரில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில், விவசாயி குடும்பம் வீட்டிற்குள் வைத்து பூட்டி சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

பூங்குளம் செட்டிவடம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முனியனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முனியன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று, வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டி சிறை வைத்ததாக தெரிகிறது. மேலும், வீட்டின் முன்பு இருந்த தென்னை மற்றும் முருங்கை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்......

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்