தற்போதைய செய்திகள்

இவர்கள் படத்தை தவிர வேற யாரு படமும் இருக்க கூடாது.. உயர் நீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்ற, ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர மற்ற வேறு படங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்