தற்போதைய செய்திகள்

"கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டியதில்லை.."12 மணி நேர வேலை மசோதா - ஆளுநர் தமிழிசை திடீர் ஆதரவு

தந்தி டிவி

12 மணி நேர வேலை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், எந்த ஒரு திட்டத்தையும் அல்லது கருத்தையும் கண்மூடித்தனமாக மறுக்க வேண்டியதில்லை என கூறியுள்ளார். அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.12 மணி நேர வேலைத் திட்ட மசோதா நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம், தொழிலாளர் நலம் ஆகியவற்றுக்கு உதவி செய்யும் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான ஓய்வு எடுப்பதால் மீண்டும் பணிக்கு திரும்பும் போது தொழிலாளர்களின் செயல் வேகம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுவதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்