• தேனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
• தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், அன்னஞ்சி விளக்கு பகுதியில் வந்தபோது பின் சக்கர டயர் வெடித்து சிதறியது.
• இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி, அப்பளம்போல் நொறுங்கியது.
• இந்த கோர விபத்தில், கேரளாவை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.