தற்போதைய செய்திகள்

வாக்கிங் சென்ற தொழிலதிபர் கடத்தல்.. பின்னாலே பாலோ செய்த போலீஸ் அடுத்த நடந்த விபரீதம் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி
• கம்பம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அதிசயம். தொழிலதிபரான இவர், கோழிப்பண்ணை, திராட்சை தோட்டம், ரியல் எஸ்டேட் என பல தொழில்கள் செய்துவந்துள்ளார். • இவர் நடைபயிற்சி செல்லும் போது, காரில் வந்த மர்மநபர்கள் அதிசயத்தை தாக்கி கடத்தி சென்றனர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், இதையடுத்து, தொழிலதிபர் அதிசயத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். • பின்னர், ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தைக் கண்ட காவல்துறையினர், துரத்திச் சென்றபோது, வைகை புதூர் பிரிவில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். • இதில் படுகாயம் அடைந்த அவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தப்பிச் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கிப் பிடித்தனர். • அப்போது கார் ஓட்டுநர் பிரபுவை பிடித்து விசாரணை நடத்தியதில், அஜித், கெளசிக், திருப்பதி ஆகியோரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு