தற்போதைய செய்திகள்

ஆடு, கோழிகளை திருடிய இளைஞர்... தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம் - தென்காசியில் பயங்கரம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மாவடிக்கால் பகுதியை சேர்ந்தவர் சாமி. இவர் மங்களப்புரத்தில் உள்ள பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த தோட்டத்தில், அகரகட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் - லில்லி தம்பதி, தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், இருவரையும் அவருடைய மகன் பெஞ்சமின் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வந்து செல்லும் போது, செலவுக்கு பணம் கேட்டு பெற்றோருடன் தகராறு செய்யும் பெஞ்சமின் , தோட்டத்திலிருந்து, ஆடு, கோழி மற்றும் தேங்காய்களை விற்று பணம் பார்த்து வந்திருக்கிறார். இதை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சாமி, கண்டித்த நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை வைத்து சாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த பெஞ்சமினை கைது செய்து சிறையிலடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்