தற்போதைய செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நைசாக கைவரிசை காட்டிய இளைஞர் - 24 மணி நேரத்தில் ரவுண்ட் கட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு பணிக்கு சென்றிருந்தார். அவரது மனைவி ஆஷா மற்றும் மகன் மட்டும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, பீரோ திறக்கும் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் பீரோவில் திருடிக்கொண்டு தப்பியோடியது தெரிய வந்த‌து. பீரோவை பார்த்த போது, 18 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது, கொள்ளையன் பேருந்தில் ஏறிச் சென்றது தெரிய வந்த‌து. சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து, கொள்ளையடித்த ஆனந்த் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 34 கிராம் தங்கம் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?