தற்போதைய செய்திகள்

ஆந்திராவில் போலீஸ் ஜீப்பை கடத்திய இளைஞர்..விரட்டி பிடித்து மாஸ் காட்டிய தமிழக போலீஸ் - சினிமாவை மிஞ்சிய சேசிங் காட்சி

தந்தி டிவி

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட போலீஸ் ஜிப்பை, சினிமா பாணியில் துரத்தி சென்ற தமிழக போலீசார் இளைஞரை கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் சித்தூரில் போலீஸ் ஜீப்பை இளைஞர் ஒருவர் திருடி வேலூர் வழியாக சென்றார். இது குறித்து ஆந்திர போலீசார் தகவல் அளித்த‌தும், தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வந்தவாசியில் பஜார் வழியாக ஜீப் சென்றதை பார்த்த துணை கண்காணிப்பாளர் கார்த்திக், துரத்திச் சென்றார். ஜீப்பை மடக்கி, திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், ஜீப்பை திருடியது சித்தூரை சேர்ந்த சூர்யா என்று தெரிய வந்த‌து. இதையடுத்து, சூர்யாவையும், ஜீப்பையும் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்