தற்போதைய செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற தன்னார்வலர் மாயம்.. ஈஷா யோகா மையம் போலீசில் புகார்

தந்தி டிவி

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் என்ற சுவாமிபவத்துதா. இவர் கடந்த ஈஷா யோக மையத்தில் தங்கி இருந்து, தன்னார்வ தொண்டு செய்து வருகிறார்‌. கடந்த மாதம் 28ம் தேதி, ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், 3 நாள் ஆகியும் ஈஷா யோக மையத்திற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஈஷா யோக மையம் தரப்பில், அவரது உறவினர்களிடம் கேட்டபோது, யாரையும் தொடர்புகொள்ளவில்லை என தெரியவந்தது. காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து தருமாறு, ஈஷா யோக மையம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்