தற்போதைய செய்திகள்

இரவின் நிழல் பட பாணியில் சித்ரவதை செய்த வட்டி கும்பல்.. ஆட்டோ டிரைவரின் குடும்பத்தை கடத்தி வந்து கொடூரச் செயல்

தந்தி டிவி
• ஸ்பீடு வட்டிக்கு வாங்கிய பணத்த குடுக்காததால, ஆட்டோ டிரைவரோட மனைவி குழந்தைய கடத்தி லாட்ஜில அடச்சி வச்சி சித்ரவதை செய்திருக்கு இங்க ஒரு வட்டி கும்பல்... தலைவிரித்தாடும் வட்டி கும்பலுக்கு கடிவாளம் போடுமா காவல்துறை? • வாங்கிய பணத்திற்கு கணவன் வட்டி கட்ட தவறியதால், மனைவியை அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும் காட்சிகளை இரவின் நிழல் திரைப்படத்தில் பார்த்திருப்போம்... • இந்த காலத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்று ஏளனத்துடன் பார்த்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இரவின் நிழல் காட்சியை ரீகிரியேட் செய்திருக்கிறது அரக்கோணத்தை சேர்ந்த ஒரு பைனான்ஸ் கும்பல். • ஸ்பீடு வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப செலுத்த தாமதமானதால், ஆட்டோடிரைவரின் மனைவி குழந்தையை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து, அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட சித்தூர் ரோடு சாய்பாபா நகரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் வர்மா. 30 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். • இவருக்கு சுவாதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டி வரும் வருமானம் போதாததால், குடும்ப செலவிற்காக கடந்த மாதம் 5ம் தேதி அரக்கோணத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் ஸ்பீடு வட்டிக்கு வாங்கி இருக்கிறார் பிரித்விராஜ். • ஆனால் அதிலும் ரூ.15 ஆயிரம் வட்டி பிடித்துக் கொண்டு ரூபாய் 35 ஆயிரம் மட்டும் கையில் கொடுத்துள்ளது அந்த நிறுவனம். 85 நாட்களுக்கு தினமும் 600 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி பிரித்விராஜ் தினமும் 600 ரூபாயை தவறாமல் செலுத்தி வந்திருக்கிறார். இதுவரை 35 நாட்கள் வட்டி பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. • ஆனால் கடந்த சில நாட்களாக பிரித்திவிராஜால் பணம் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. இதனால் ஸ்பீடு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் திருத்தணியில் உள்ள பிரித்விராஜை தொடர்பு கொண்டு இன்னும் 50 நாட்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். • மேலும் நேரில் வந்து விளக்கம் கொடுக்குமாறு பிரித்விராஜின் குடும்பத்தையே வரவழைத்திருக்கிறார்கள். இதனை நம்பி சென்ற • பிரித்விராஜையையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் கடத்தி அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். • அங்கே மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன், தீபக் ஆகிய 2 பேரும் சேர்ந்து, வாங்கிய கடனை ஸ்பீடு வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அசிங்கமாக பேசி பிரித்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். • அத்துடன் அங்கே கிடைத்த ஆயுதங்களை வைத்து பிரித்திவியையும் , அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. • இதனை தொடர்ந்து பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு உன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்லுமாறு பிரித்விராஜை மட்டும் மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். • ஸ்பீடு வட்டிக்கு வாங்கிய பணத்தை செலுத்த முடியாததால் கொலை மிரட்டல் விடுத்து மனைவி குழந்தையை தனியார் லாட்ஜில் அடைத்து வைத்து டார்ச்சர் செய்யும் கும்பல் குறித்து திருத்தணி ஏஎஸ்பி ஷுபம் திவானிடம் பிரித்விராஜ் புகார் அளித்திருக்கிறார். • ஏஎஸ்பி உத்தரவின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் போலீசருடன் அரக்கோணம் விரைந்து சென்று அங்கு லாட்ஜில் அடைத்து வைத்திருந்த பிரித்விராஜின் மனைவி சுவாதி அவரது குழந்தையை மீட்டனர். • மேலும் அங்கிருந்த இருவரையும் கைது செய்து திருத்தணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். • அதில் தான் அரக்கோணத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் பைனான்ஸ் நிறுவனத்தில் பிரித்விராஜ் ஸ்பீடு வட்டிக்கு பணம் வாங்கியதும், அவரின் தூண்டுதலின் பேரில் தான் தமிழ்வாணனும் தீபக்கும் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவி குழந்தையை லாட்ஜில் உள்ள அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. • இதையடுத்து பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கர், கொலை மிரட்டல் விடுத்த தமிழ்வாணன் மற்றும் தீபக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு