தற்போதைய செய்திகள்

அட்வான்ஸ்-யை திருப்பி கேட்ட வாடகைதாரர்.. தர மறுத்த வீட்டின் உரிமையாளர்.. முற்றிய மோதலால் ஏற்பட்ட சோகம்

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட வாடகைதாரரை வீட்டின் உரிமையாளர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

செங்கல்பட்டு மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பாரதி நகரில் நரேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் கழிவு நீர் செல்ல வழியில்லாததால், வீட்டை காலி செய்த சந்திரசேகர் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில், அட்வான்ஸை திருப்பி தர நரேஷ் மறுத்த நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செங்குன்றம் சந்திப்பு சாலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பும் தன் மகளை அழைத்து செல்ல சந்திரசேகர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நரேஷ் சந்திரசேகரை சராமாரியாக தாக்கி தப்பிச்சென்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் அடிப்படையில், நரேஷை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்