உத்திர பிரதேச மாநிலம், கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், கவனக்குறைவாக மாணவனை வகுப்பறையில் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வகுப்பறையில் மாணவன் தூங்கியதை பார்க்காமல், பள்ளி அலுவலர்கள் அறையை பூட்டிச் சென்றனர். மாணவனை காணாமல் போனதாக பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், பள்ளிக்கு அருகில் தேடிப் பார்த்தபோது மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர்.