தற்போதைய செய்திகள்

ஹான்ஸ் கேட்டு கடைக்கார பெண்ணுக்கு அடி.. கடையை சூறையாடிய மர்மநபர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னையில் போதை வஸ்துக்கள் இல்லை என கூறிய கடைக்கார பெண்ணை, கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் பொன்னி. இவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், https://youtu.be/6RM5i3Mbrjcமற்றும் கூல் லிப் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை கேட்டுள்ளனர்.

அதற்கு, கடை உரிமையாளர் பொன்னி இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பட்டாகத்தியால் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் பொன்னியை தாக்க முயன்றபோது, லேசான காயத்துடன் அவர் தப்பினார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றபோது, இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்