தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக வந்து கோடியில் திருட்டு - வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான குப்ரோ நிக்கல் பைப்புகளை திருடியது தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான 690 கிலோ குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட உதிரி பாகங்களை, கடந்த 10ஆம் தேதி கடல் பகுதி வழியாக வந்து கும்பல் திருடிச் சென்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனல் மின் நிலைய ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 பேர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்