தற்போதைய செய்திகள்

கோவிஷீல்டு உற்பத்தியை மீண்டும் துவக்கியது சீரம் நிறுவனம்

தந்தி டிவி

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.

சீரம் நிறுவனம் 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். கோவோவேக்ஸின் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளதாகவும், இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டு கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார். அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் வரையில் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்