தற்போதைய செய்திகள்

#Breaking || குட் நியூஸ்.. குறைந்தது சிலிண்டரின் விலை..நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்

தந்தி டிவி

இந்தியாவில் சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 1 ஆம் தேதியான இன்று, விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 171 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் 84 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று வரை 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட் வந்த நிலையில் (கடந்த மாதம் விலை 2021.50) ஜூன் 1 ம் தேதியான இன்று முதல் 84 ரூபாய் குறைந்து, ஆயிரத்து ஆயிரத்து 937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14.2 கிலோ எடை கொண்டவீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரத்து 118 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்