தற்போதைய செய்திகள்

காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - இறப்பிற்கு முன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில் பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகள் கொடுத்த தொந்தரவால், மனவேதனை அடைந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், இறப்பிற்கு முன் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் தம்பு லேன் காவல் குடியிருப்பில் வசித்து வந்த லோகேஷ், கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக, பல நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததால், பிளாக் மார்க் செய்யப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் லோகேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் கழிவறைக்கு சென்ற லோகேஷ், நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது மகள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் லோகேஷ் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இறப்பதற்கு முன்னதாக காவலர் லோகேஷ் துணை ஆணையருக்கு அனுப்பி ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

EPS | ADMK | Puducherry | புதுச்சேரியில் முக்கிய மீட்டிங்கில் ஈபிஎஸ் | மிஸ்ஸான முக்கிய VIP?

DMK | MK Stalin | "என்ன முடிவு எடுத்தாலும்; அனைவரும் கட்டுப்படவேண்டும்.." ஸ்டாலின் அதிரடி உத்தரவு

EPS | Puducherry | "நாளைய முதல்வர்.." | ஈபிஎஸ் என்ட்ரி ஆனதும் புதுச்சேரி ரிசார்ட்டில் கேட்ட முழக்கம்

BREAKING || "திமுக + அதிமுக சேர்ந்தால் இரு கட்சிக்குமே பேராபத்து... விஜய் முதல்வராவதே நல்லது"

Breaking | MK Stalin | DMK Alliance | திமுகவின் நெக்ஸ்ட் Big மூவ் | கூட்டணி கட்சிகளின் முடிவு?