தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபரை பதறவிட்ட விமானம் - அதிர்ச்சியில் உறைந்த பாதுகாப்பு அதிகாரிகள்

அமெரிக்க அதிபர் பைடன் ஓய்வெடுத்த கடற்கரை பகுதியில் அத்துமீறி விமானம் ஒன்று பறந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

அமெரிக்காவின் டிலாவர் நகரில் உள்ள ரிஹோபோத் கடற்கரை பகுதியில் உள்ள வீட்டில் அதிபர் பைடன் ஓய்வெடுக்க சென்றுள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வான்வெளியில் அனுமதியில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்துமீறி சிறிய விமானம் ஒன்று பறந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் அதிபர் பைடனை பாதுகாப்பு வீட்டுக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த விமானத்தை, பாதுகாப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, விமானம் தவறுதலாக தடை செய்யப்பட்ட இடத்திற்கு வந்த‌தாகவும், இதனால், அதிபர் பைடனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்