தற்போதைய செய்திகள்

காலியாக இருந்த இடம்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சோகம்.. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி

தந்தி டிவி

மரம் நடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில், பெண்ணின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர் வண்டியைத் தீயிட்டு எரித்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி சுற்றுலாத் துறையில் பணியாற்றும் நடுஓடுதுறை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வாசுகி. இவர்களது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கிறார் வேலு என்ற ராஜசேகர். அப்பகுதியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான காலி இடம் ஒன்று உள்ள நிலையில், அங்கு யார் யார் மரம் நடுவது என்பது குறித்து இரு குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று தகராறு முற்றி, வேலு, வாசுகி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதுடன், தகாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டே வாசுகி மீது கட்டையைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். பலத்த காயம் அடைந்த வாசுகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வேலுவைக் கைது செய்தனர்.

Gold Rate | சடனாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இவ்வளவுதான்

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"