தற்போதைய செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளரை கடத்திய நபர்கள்.. காரணம் என்ன?விசாரணையில் வெளிவந்த உண்மை

தந்தி டிவி

சத்தியமங்கலத்தில், திரைப்பட தயாரிப்பாளரை கடத்திய மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற திரைப்பட தயாரிப்பாளர், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன் ஆகியோரை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இரண்டரை லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறித்த கரிகாலன், கார்த்திகேயன் ஆகியோர், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவருடன் இணைந்து கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ண பிரசாந்த்தை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீசார், தயாரிப்பாளரை கடத்திச் சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர், தயாரிப்பாளரை கடத்திய மூவரையும் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்