தற்போதைய செய்திகள்

நைசாக நோட்டமிட்டு திருட முயன்ற நபர்.டக்குனு சுதாரித்து கொண்ட உரிமையாளர்.. தப்பிய ரூ.1.10 லட்சம்

தந்தி டிவி

வண்டியில் இருந்த பணத்தைத் திருட வந்த திருடன் உரிமையாளரைக் கண்டதும் ஓட்டம் பிடித்த சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்துள்ளது. திருப்புவனம் நகரில் வசித்து

வரும் அழகுமணி வங்கியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, அதை தனது ஸ்கூட்டிக்குள் வைத்துக் கொண்டு, வங்கி அருகே உள்ள உறவினர் கடைக்கு வந்துள்ளார். கடைக்கு வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றதை, வங்கியில் இருந்தே நோட்டமிட்டு வந்த 2 திருடர்கள் கவனித்துள்ளனர். எதுவும் தெரியாதது போல், அதில் ஒரு திருடன் கேஷுவலாக வந்து வண்டியில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்ததை அழகுமணி பார்த்து விட்டார். அவர் துரத்தி வந்ததைக் கண்ட திருடன் ஒரே ஓட்டமாக ஓட்டம் பிடித்து மற்றொரு திருடனுடன் இருசக்கர வாகனத்தில் பறந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சியைப் பார்க்கலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்