தற்போதைய செய்திகள்

சட்டையை கழட்டி சண்டைக்கு நின்ற 'போதை' ராஜாவின் காலுக்கு மாவுக்கட்டு - போலீசையே அலறவிட்டவர் பெட்டில் அட்மிட்..!

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சரியை சேர்ந்தவர் நாகராஜ். 32 வயதான இவர், மதுபோதையில் கிழக்கு கடற்கரை சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், நாகராஜை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்....

அப்போது போலீசாரிடம் நாகராஜ் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில், அவரை கூவத்தூர் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசாரை, நாகராஜ் ஒருமையில் பேசி தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது...

இதை தட்டிக்கேட்ட பெண் காவலரை தாக்குவது போல் அருகில் சென்று மிரட்டிய நகராஜ், அதை கண்டித்த சக காவலர்களை மீண்டும் ஒருமையில் பேசி தகராறு செய்ததை அங்கிருந்த காவலர்கள் செல்போனில் படம்பிடித்தனர்..

தொடர்ந்து, காவல்நிலையத்தில் தன் மீது வழக்குபதிவு செய்ய முயன்ற காவல்நிலைய ரைட்டரை, அவருடைய குழந்தைக்காக பார்ப்பதாகவும், இல்லையென்றால் நடப்பதே வேறு என செல்போனில் யாருக்கோ கால் செய்த நாகராஜ் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ பரவி வருகிறது...

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நடந்தது என்ன?, வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல காவல்நிலையத்தினுள் வைத்து நாகராஜ் தாக்கப்பட்டாரா?, இல்லையெனில், ஒருவர் காவல்நிலையத்தினுள் புகுந்து போலீசாரை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கையில் அதை காவலர்கள் வீடியோ எடுத்தது ஏன்? என பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது...

இந்நிலையில், பெரும் அலப்பறை செய்த நாகராஜை நீ காவல்நிலையத்தில் இருந்து சென்றால் போதும் என கூறி அவரை காவலர்கள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது....

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’