தற்போதைய செய்திகள்

பணத்தை டெபாசிட் செய்தவர் கண்ணில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து பயங்கரம் ..பையில் இருந்த லட்சங்கள்-திகில் காட்சிகள்

தந்தி டிவி

ஹைதராபாத் அருகே, ஏடிஎம் மையத்தில் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்தவரின் கண்ணில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹூமாயத் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையத்தில், கடந்த 3ம் தேதி பணத்தை டெபாசிட் செய்துவந்த நபரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவரை பலமாக தாக்கிவிட்டு தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரை ஹைதராபாத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்