தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் ஆஜராக வந்தவர்.. ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிடாரகுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியபோது, மர்மநபர்கள் 3 பேர் ஓட ஓட விரட்டி அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக, ஆலங்குளம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி, இசக்கிதுரை, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நாச்சியார்பட்டியில் நோட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் அவர்களது நண்பர்கள் ஆட்டுக்குட்டியினை திருடியுள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த மணிகண்டன், அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் தாக்கியதில், முத்துப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் ஆஜராக வந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி