தற்போதைய செய்திகள்

விவசாயியை தாக்கிய ஊராட்சிமன்ற தலைவர்.."அப்பா.." என கதறியப்படி வீடியோ எடுத்த மகள் - திருப்பத்தூரில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரத்தில் விவசாயி ஒருவரை ஊராட்சி மன்ற தலைவர் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நாட்றம்பள்ளி அடுத்த ஜெயபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குணசேகரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஜெயராமனுக்கும், குணசேகரனின் உறவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சம்பவத்தன்று தகராறு முற்றியுள்ளது. இந்நிலையில், அன்று மாலை பணியாண்டப்பள்ளி திமுக ஊராட்சி மன்ற தலைவரான சுந்தரம், தனது அடியாட்களை அழைத்துக்கொண்டு ஜெயராமனை சரமாரியாக தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை, ஜெயராமனின் மகளான 6 ஆம் வகுப்பு மாணவி, தந்தை தாக்கப்படுவதை செல்போனில் படம் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்